வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

0 667
வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொள்ளும், காணொலி வாயிலான மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

உலகளாவிய வளர்ச்சிக்காக இந்தியாவில் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை வலுப்படுத்துவதற்கான, ஒத்துழைப்பு வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான இந்த மாநாடு அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

55 நாடுகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்குபெற உள்ளனர். வைபவ் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை, இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முன்னதாக, மாநாட்டில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments