ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் முன்னறிவிப்பின்றி பாக்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு: 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

0 1131
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் முன்னறிவிப்பின்றி பாக்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு: 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் நவ்காம் பகுதியில் முன்னறிவிப்பின்றி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எல்லையில் இதனால் பதற்றம் உருவானது.

உடனடியாக களமிறங்கிய இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலிலும் ஒரு வீரர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments