புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் கருடசேவை

0 972
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் கருடசேவை சிறப்பாக நடைபெற்றது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருடசேவை சிறப்பாக நடைபெற்றது.

ரங்க நாயக்கர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை, ஜீயர்கள், அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பக்தியுடன் வழிபட்டனர். மேலும், இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டம் சேர்வதை தடுக்க இலவச தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

300 ரூபாய் மதிப்பிலான சிறப்பு தரிசன டிக்கெட்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments