வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: விவசாயிகளின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தயார்- அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 758
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: விவசாயிகளின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு தயார்- அமைச்சர் ராஜ்நாத்சிங்

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் அச்சத்தைப் போக்கத் தயாராக மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.

கடந்த 5 நாட்களாக விவசாயிகள் ரயில் மறியல் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் , சுக்பிர் சிங் பாதல் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். 31 விவசாய அமைப்புகள் சார்பில் பஞ்சாபில் போராட்டம் நடத்தப்பட்டது.

சண்டிகரில் சுக்பிர் சிங் பாதல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பாய்ச்சியும் கூட்டத்தை விரட்டியதால் பரபரப்பு நிலவியது

இதனிடையே விவசாயிகள் பேரணியுடன் சண்டிகரில் நுழைந்த ஹர்சிம்ரத் கவுர் கைது செய்யப்பட்டார். சண்டிகரில் சுக்பீர் பாதலையும் போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments