அர்மீனியா - அசார்பைஜான் இடையே போர் மூண்டது..அசார்பைஜானுக்கு ஆதரவாக களம் இறங்கியது துருக்கி..!

0 3618

அர்மீனியாவுக்கு எதிரான போரில் சிரியா, லிபிய நாட்டின் கிளர்ச்சியாளர்களை அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி களமிறக்கியுள்ளது.

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதல் போராக மாறி உள்ளது.இந்த போரில் தற்போதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கி உள்ளது.

கிளர்ச்சியாளர்களை துருக்கி விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கு ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments