பதினைந்தே நிமிடத்தில் முடிவு தெரியும் கொரோனா சோதனை முறைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகாரம்!

0 1117
பதினைந்தே நிமிடத்தில் முடிவு தெரியும் கொரோனா சோதனை முறைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகாரம்!

பதினைந்தே நிமிடத்தில் முடிவு தெரியும் கொரோனா சோதனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Becton Dickinson என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சோதனை முறையில்,கொரோனா வைரசின் மேற்பகுதியில் உள்ள ஆன்டிஜன்களை கண்டுபிடிப்பதன் வாயிலாக தொற்று உறுதி செய்யப்படுகிறது.

BD Veritor Plus System என்ற செல்போன் அளவிலான கருவி வாயிலாக சோதனை நடத்தப்படுகிறது.

இந்த மாத இறுதியில் இந்த கருவிகள் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கண்டுபிடிப்பு முறைகளில் இந்த கருவியின் வருகை  ஒரு திருப்பு முனையாக இருக்கும் என Becton Dickinson தெரிவித்துள்ளது.

பிசிஆர் சோதனையை விட விரைவாக  இதில் முடிவு தெரிந்தாலும், பொதுவாக முடிவுகள் துல்லியமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments