சபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

0 18990
சபரிமலை பூஜை: ஆன்லைன் முன்பதிவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மண்டல கால மகர விளக்கு பூஜை மற்றும் ஐப்பசி மாத பூஜைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது, இதுதவிர, கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - 10 வயதிற்கு குறைவான பக்தர்களுக்கும் 65 வயதிற்கு அதிகமான பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments