கொரோனா விழிப்புணர்வு கண்காட்சி..! கண்ணைக் கவரும் பொம்மைகளால் கருத்தை விளக்கிய மருத்துவர்கள்..!

0 499

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பொம்மைகள் கண்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முகக்கவசம் அணியும் முறை, கைகளைக் கழுவும் முறை, பொது நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியன குறித்துப் பொம்மைகளைக் கொண்டு விழிப்புணர்வுக் கண்காட்சியை மருத்துவர்கள் அமைத்திருந்தனர். கொரோனா தொற்றில் இருந்து நுரையீரலைக் காத்துக்கொள்ள யோகாசனப் பயிற்சி செய்வதன் தேவையையும் வலியுறுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள், இயற்கை மருத்துவ முறைகள் ஆகியன குறித்த பொம்மைகளும் கண்ணைக் கவரும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments