இமாச்சலத்தில் மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள அடல் குகைவழிப்பாதையை சனியன்று திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி

0 2041
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் அமைக்கப்பட்டுள்ள அடல் குகைவழிப்பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி சனியன்று காலை 10 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் அமைக்கப்பட்டுள்ள அடல் குகைவழிப்பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி சனியன்று காலை 10 மணிக்குத் திறந்து வைக்க உள்ளார்.

இமாச்சலத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கணவாய்ப் பகுதி ஆண்டின் 9 மாதங்கள் உறைபனியால் மூடப்படுவதால், ஆண்டு முழுவதும் பயன்படும் வகையில் 9 கிலோமீட்டர் தொலைவுக்கு மலையைக் குடைந்து குகைவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. எல்லைச் சாலைகள் அமைப்பால் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் பத்தாண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளன.

இது நெடுஞ்சாலை அமைந்துள்ள குகைவழிப் பாதைகளில் உலகிலேயே நீளமானதாகும். அடல் குகைவழிப்பாதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாதையை நாளை மறுநாள் காலை 10 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கிறார். குகைவழிப் பாதை அமைத்துள்ளதால் மணாலி - லே இடையான பயணத் தொலைவு 46 கிலோமீட்டர் குறையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments