நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பான விசாரணை : இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆஜர்

0 892
நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பான விசாரணை : இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆஜர்

நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் ஆஜரானார்.

கடந்த 2013ஆம் ஆண்டு, இயக்குநர் அனுராக் காஷ்யப் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக, நடிகை பாயல் கோஷ் புகார் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், பெண்ணை மானபங்கம் செய்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் வன்முறை உள்ளிட்ட 4 பிரிவுகளில் அனுராக் காஷ்யப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தனக்கு அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில், அனுராக் காஷ்யப், மும்பை பெர்சோவா காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments