சீனாவிடமிருந்து எல்லைப் பகுதியைக் காக்க ”நிர்பய் ஏவுகணைகளை” எல்லைக்கு கொண்டுசென்றது இந்திய ராணுவம்

0 962
சீனாவிடமிருந்து எல்லைப் பகுதியைக் காக்க ”நிர்பய் ஏவுகணைகளை” எல்லைக்கு கொண்டுசென்றது இந்திய ராணுவம்

சீனாவிடம் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைக் காக்கக் கிழக்கு லடாக்கில் நிர்பய் ஏவுகணைகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்பிருந்த நிலையைத் தாண்டிச் சீன ராணுவம் தனது படையினரை நிறுத்தி வைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் நிர்பய் ஏவுகணையை இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றுள்ளது.

இவ்வகை ஏவுகணைகளின் ஏழாம் கட்டச் சோதனையை அடுத்த மாதத்தில் நடத்த ராணுவமும், கடற்படையும் திட்டமிட்டுள்ளன. எல்லையைக் காப்பதற்காக அதை முன்கூட்டியே படையில் சேர்க்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments