செங்கல்பட்டு போக்குவரத்து கழக பணிமனையில் 6 மணி நேரமாக ஊழியர்கள் போராட்டம்

0 7066
செங்கல்பட்டு போக்குவரத்து கழக பணிமனையில் 6 மணி நேரமாக ஊழியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை இயக்க மறுத்து சுமார் 6 மணி நேரமாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

பேருந்து பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு முறையாக டியூட்டி தராமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டு, அந்த நாளை விடுப்பு நாளாக கருதி ஊதியத்தில் பிடித்தம் செய்வதாகவும், 60 % பயணிகளோடு பேருந்தை இயக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 100% பயணிகள் ஏறும்வரை காத்திருக்க வைத்து உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்கவிடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுனர்.

இதுதவிர, தினசரி வழக்கப்படும் படிகளும் வழங்கப்படுவதில்லை என்றும், பேருந்தில் வசூல் குறைவாக உள்ள நாட்களில் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments