ஜம்மு - காஷ்மீரில் பாக்., தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்; மேலும் ஒரு வீரர் காயம்

0 817
ஜம்மு - காஷ்மீரில் பாக்., தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்; மேலும் ஒரு வீரர் காயம்

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட்டே மற்றும் கிருஷ்ணா காட்டி செக்டார் பகுதிகளில் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் லான்ஸ் நாய்க் கர்னைல் சிங் எனும் இந்திய வீரர் வீரமரணமடைந்ததாக, ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments