இன்றைய ஐபிஎல் போட்டியில் : மும்பை-பஞ்சாப் அணிகள் மோதல்

0 791
இன்றைய ஐபிஎல் போட்டியில் : மும்பை-பஞ்சாப் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், மும்பை அணி 13 முறை வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 5வது இடத்திலும், மும்பை 6வது இடத்திலும் உள்ளது.

தொடரில் இறுதியாக விளையாடிய லீக் போட்டியில் இரு அணிகளும் தோல்வியை சந்தித்ததால், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments