இந்தியாவில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 86,821 பேர் பாதிப்பு : 1,181 பேர் பலி

0 982
இந்தியாவில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 86,821 பேர் பாதிப்பு : 1,181 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 86,821 பேருக்கு தொற்று உறுதியானதோடு, 1,181 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 52 லட்சத்து 73 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில்,  98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

9 லட்சத்து 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கடந்த செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் மொத்த பாதிப்புகளில் 41 சதவீதமும் பதிவாகியுள்ளது.

செப்டம்பரில் 33, 255 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments