ரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பாமாயில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

0 1421
ரேஷன் கடைகளில் தங்கு தடையின்றி பாமாயில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

ரேஷன் கடைகளில் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தங்கு தடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாமாயில் வழங்க மாதம் ஒன்றுக்கு 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் பாமாயில் தேவைப்படுகிறது.

ரேஷன்கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது.  அவர்களுக்கு ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு பாமாயில் வழங்க, நூறு சதவீத பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய, மாதம் ஒன்றுக்கு 47கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments