அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு

0 918
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் மாடல் அழகி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அமி டோரிஸ் எனப்படும் அந்தப் பெண் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். கடந்த 1997ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது, டிரம்ப் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 1990ம் ஆண்டில் பல்பொருள் அங்காடியில் டிரம்ப் தன்னைப் பலாத்காரம் செய்ததாக எழுத்தாளர் ஜீன் கரோல் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments