மூன்று முன்னணி நடிகர்களிடம் விசாரணையை தொடங்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திட்டம்

0 606
மூன்று முன்னணி நடிகர்களிடம் விசாரணையை தொடங்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திட்டம்

தீபிகா படுகோன் உள்பட நான்கு நடிகைகளிடம் விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் முன்னணியில் உள்ள மூன்று நடிகர்களிடம் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் பதற்றத்தில் உள்ள பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகைகளிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து நடிகர்கள் தங்கள் செல்போன்களில் உள்ள தகவல்களை நீக்கி வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டுக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் உள்ள தொடர்புகள் சுஷாந்த்சிங்கின் மரணத்தையடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments