இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே மாதத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா... 33,000 பேர் உயிரிழப்பு

0 1235
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே மாதத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா... 33,000 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் 26 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பாதிப்பில் 41 சதவிதம் ஆகும்.

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் 34 சதவித உயிரிழப்பு கடந்த மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த மாதத்தில் நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments