ஐ.பி.எல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

0 1092
ஐ.பி.எல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, களமிறங்கிய கொல்கத்தா அணியில், சுப்மன் கில் 47 ரன்களை சேர்க்க , மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

இறுதிக் கட்டத்தில் இயன் மார்கன் 34 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் டாம் கர்ரன் 54 ரன்களை குவிக்க, மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் ஒற்றை இலக்கில் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்த அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments