நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள்..!

0 2608

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 93 வது பிறந்தநாள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து மறைந்த மகத்தான கலைஞனைப் பற்றிய செய்தித் தொகுப்பை இப்போது காண்போம்...

பராசக்தி படத்தில் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தை உச்சரித்த இந்த நடிகரை தமிழகமே திரும்பிப் பார்த்தது. நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டிய சிவாஜி தனக்கு முன்பு இருந்த அத்தனை நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளினார்.

குடும்பப் பாங்கான படங்கள் சிவாஜி கணேசனின் வசன உச்சரிப்புக்கும் நடிப்புக்கும் பெரிதாகக் கை கொடுத்தன. புராணம் மற்றும் வரலாற்றுப் பாத்திரங்களிலும் சிவாஜி கணேசனைப் போல் ஒரு நடிகரை இனி என்றுமே காண முடியாது என்று அனைவராலும் புகழப்பட்டார் .

ஜூலியஸ் சீசர், பாரதி, பகத்சிங், ஹாம்லட், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாகு, சிவபெருமான், திருமால், நாரதர், அப்பர், பரதன், கர்ணன் போன்ற பல்வேறு பாத்திரங்களிலும் சிவாஜி கணேசனின் நடிப்பு ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தந்தையாக, அண்ணனாக , கணவனாக ,காதலனாக, நண்பனாக, தலைவனாக பல அவதாரங்கள் எடுத்த சிவாஜி கணேசனின் பாசம் மிகுந்த பாத்திரங்கள் தமிழக மக்களின் குடும்ப வாழ்வுடன் பின்னிப் பிணைந்து விட்டன. 

படத்தில் எத்தனை வேடமேற்றாலும், எந்த வயது வேடமானாலும், அத்தனை வேடங்களிலும் மாறுபட்ட நடிப்பை கொடுப்பதில் என்றுமே அவர் மட்டுமே முன்னோடி

எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் தொடங்கி ரஜினி, கமல், பாக்யராஜ், விஜய் வரை ஏராளமான கதாநாயகர்களும் சிவாஜியுடன் நடித்துள்ளனர்.

இப்படி ஒரு நடிகரை தமிழ்த் திரையுலகம் பெருமையுடன் உலகிற்கு அளித்துள்ளது.எத்தனை காலங்கள் மறைந்தாலும் சிவாஜி கணேசன் என்ற நடிகரின் நினைவுகள் மறையாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments