இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை

0 1655
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் விவசாய தேவைக்காக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டுமென பிரதமர் மகிந்தா ராஜபக்சே பரிந்துரை செய்தார்.

இதை, ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியின் நாடாளுமன்ற குழு கடந்த 8ம் தேதி ஏற்றது. இதைத் தொடர்ந்து, மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரம், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments