பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற இடத்தில் பலத்த வெடி சத்தம்: திகைத்து நின்ற வீரர்கள்!

0 2296
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற இடத்தில் பலத்த வெடி சத்தம்: திகைத்து நின்ற வீரர்கள்!

பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற இடத்திற்கு அருகில், பலத்த வெடி சப்தம் கேட்டதால் வீரர்கள் சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.

ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபெர், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுக்கு எதிராக சர்வீஸ் போட முயன்ற போது பலத்த வெடி சப்தம் கேட்டதால் ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.

இந்த சத்தத்தை உணர்ந்தவர்களும் சமூகவலைதளங்களில் அச்சம் தெரிவித்து பதிவிட்ட நிலையில், விசாரணையில் இறங்கிய பிரெஞ்ச் போலீசார் வெடிவிபத்து ஏதும் நிகழவில்லை என்றும், போர் விமானம் கடந்த போது சத்தம் கேட்டதாகவும், எனவே அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments