சென்னை-சேலம் இடையே தினமும் விமான சேவை- ட்ரூஜெட் அறிவிப்பு

0 8221
சென்னை-சேலம் இடையே தினமும் விமான சேவை- ட்ரூஜெட் அறிவிப்பு

நாளை முதல், சென்னை மற்றும் சேலத்துக்கு இடையே தினமும் விமான சேவை இயக்கப்படும் என TruJet நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது, வாரம் இருமுறை, இயக்கப்பட்டு வரும் விமான சேவை, நாளை முதல், தினந்தோறும் காலை 07.25 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கும், காலை 08.45 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னக்கும் இயக்கப்பட உள்ளது.

காலை 08.45 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், சென்னை வழியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா, விஜயவாடா மற்றும் ஹைதரபாத் நகரங்களுக்குச் செல்லும் என்றும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், சேலத்தில் இருந்து புறப்படும் விமானம் சென்னை வழியாக மைசூர் மற்றும் பெல்காம் நகரங்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments