அக்டோபர் 2இல் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு அனுமதி

0 799
அக்டோபர் 2இல் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு அனுமதி

வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில் வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதித்து, அதில் விவாதிக்க வேண்டிய பொருள்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments