துப்பாக்கி முனையில் கடத்தல் முயற்சி.. சென்னையில் பரபரப்பு..!

0 1045
தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்த முயன்ற மூன்றுபேரை கைது செய்த போலீசார்

சென்னையில் துப்பாக்கி முனையில் இடைத்தரகரை காரில் கடத்த முயன்ற 3 பேர் கும்பலை கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து, 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், 3 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்டிரல் வால்டாக்ஸ் சாலை பகுதியை சேர்ந்த அருள், மாதவரத்திலுள்ள ரவுன்டானா பகுதியில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 பேர் கும்பல் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்த முயன்றது.

காருக்குள் அவரை அக்கும்பல் இழுத்து அமுக்கிய நிலையில், திமிறியபடி வெளியே குதித்து அருள் தப்பினார். மேலும் தன்னை காப்பாற்றும்படியும் அவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கும்பல் காரில் தப்பிவிட, அதுகுறித்து காவல்துறையில் அருள் புகார் செய்தார். அப்போது தன்னை கடத்த முயன்ற 3 பேரில் ஒருவன் கையில் காப்பு கட்டியிருந்ததாக தெரிவித்தார்.

பழைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து விசாரித்தபோது கையில் காப்பு கட்டிய நபர் கொளத்தூரை சேர்ந்த பயாஸ் என்ற பழைய குற்றவாளி என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதன்பேரில் கொளத்தூர் சென்று பயாசை பிடித்தனர். பின்னர் பயாஸ் அளித்த தகவலின்பேரில் ராயபுரத்தை சேர்ந்த ரியாஸ், கூடுவாஞ்சேரியை சேர்ந்த நசீர் சுற்றிவளைத்தனர்.

விசாரணையில் ஆசிப் பிரியாணி கடை கடையின் பெயரில் கிளைகளை நடத்த 3 பேரும் பணம் அளித்து இருந்ததும், தற்போது கடை மூடப்பட்டதால் அப்பணத்தை பெற்று தருவதாக கூறி, அருள் பணம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் வாக்குறுதியளித்தது போல பிரியாணி கடையிடம் இருந்து பணத்தை பெற்று தராததுடன், தாங்கள் கமிஷனாக அளித்த பணத்தையும் திருப்பி தராததால் ஆத்திரமடைந்து 3 பேரும், கொல்கத்தாவிலிருந்து ஏற்கெனவே திருட்டுத் தனமாக வாங்கி வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று அருளை கடத்தி சென்று பணத்தை திரும்ப பெற திட்டமிட்டு சிக்கியள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், 2 கார்கள், 3 கத்திகள், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments