எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட டிவி சேனலை முடக்கிய போலீசார்

0 858
எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட டிவி சேனலை முடக்கிய போலீசார்

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்த தாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட பவர் டிவி சேனலை பெங்களூரு போலீசார் முடக்கினர்.

சேனலின் சர்வரை போலீசார் கைப்பற்றியதுடன், சேனல் தொடர்பான சமூக ஊடகங்களின் பாஸ்வேர்டுகளையும் மாற்றி விட்டனர். இதனால் திங்கள் இரவு முதல் சேனல் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது.

இதனிடையே தலைமறைவாகி விட்ட சேனலின் உரிமையாளர் ராகேஷ் ஷெட்டி மீது, மிரட்டி பணம்பறித்தல், போர்ஜரி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இது  குறித்து முதலமைச்சர் எடியூரப்பா இது வரை எதுவும் பேசாத நிலையில், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments