ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை

0 994
ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே  பலம் வாய்ந்த சென்னை அணியையும், பஞ்சாப் அணியையும் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.

இதனால் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் இன்று களமிறங்கவுள்ளது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த போதிலும், அதற்கடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது. இதையடுத்து இன்றைய இப்போட்டியிலும் வெற்றி பெறும் உத்வேகத்துடன் அந்த அணி  விளையாடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments