தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழை; இருவர் பலி

0 2249
தமிழகத்தில் பரவலாகப் பெய்த மழை; இருவர் பலி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இடிதாக்கியும், மழையினால் சுவர் இடிந்து விழுந்தும் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. இரவு வரை லேசான மழை பெய்த நிலையில், இரவில் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. வடபழனி, தியாகராயநகர், ராயப்பேட்டை, அமைந்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

 

தாம்பரம், மாதவரம், கேளம்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3வது நாளாக கனமழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டுமணி நேரதத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டிதீர்த்தது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ராஜசூடாமணி கிராமத்தில் இடிதாக்கியதில் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த செல்லம்மாள் என்னும் பெண் பலியானார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ராஜசூரியன்பேட்டையில் மழையினால் கூரை வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வத்சலா என்பவர் உயிரிழந்தார்.

 

இதனிடையே, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments