உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பலரால் சீரழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்

0 1728
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பலரால் சீரழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்தாரஸ் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டும் நாக்கு அறுத்து துன்புறுத்தலுக்கும் ஆளான இளம் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள், காவல்துறையினர் சமாதானப் பேச்சை அடுத்து உடலைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்குக் கொண்டு சென்றனர்.

இரவோடு இரவாக இறுதிச் சடங்குகள் நடத்தும்படி குடும்பத்தினரிடம் போலீசார் நெருக்குதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை உடலை எரிக்க மாட்டோம் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments