கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் டெல்லி துணை முதலமைச்சர்

கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குணமடைந்து வீடு திரும்பினார்.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவருக்கு கடந்த வாரம், உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. தொடர்ந்து மணீஷ் சிசோடியாவிற்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதியானதை அடுத்து, மணீஷ் சிசோடியா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Delhi Deputy CM Manish Sisodia discharged from Max hospital today after he tested negative for COVID-19. Doctors have advised him to take rest for a week: Office of Deputy CM pic.twitter.com/tePqLEv39V
— ANI (@ANI) September 29, 2020
Comments