அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்- ஜோ பைடன் நேருக்கு நேர் விவாதம்

0 1373

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடனுடன் அதிபர் டிரம்ப் இன்று நேருக்கு நேராக விவாதம் நடத்தினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதிப்பது அங்குள்ள மரபாகும் .அதன்படி இன்று இருவேட்பாளர்களுக்கும் இடையே முதல் விவாதம் தொடங்கியது. அப்போது நெறியாளரை மீறி இரு தலைவர்களும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

வரிவிதிப்புகள், உயிர்காக்கும் மருந்துகளின் விலை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், டிரம்ப் அரசு அறிவித்த மருத்துவ காப்பீடு திட்டம், பொருளாதார நிலை, வரிவிதிப்புகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருவரும் நேருக்கு நேராக விரிவான விவாதம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments