அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்த நடிகை மகாராஷ்டிரா ஆளுநருடன் சந்திப்பு

0 963
அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்த நடிகை மகாராஷ்டிரா ஆளுநருடன் சந்திப்பு

இயக்குனர் அனுராக் காஷ்யப்பை தமது பாலியல் பலாத்கார புகாரின் பேரில் கைது செய்யும் படி மகாராஷ்ட்ரா ஆளுநரிடம் பாதிக்கப்பட்ட நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் விரார் காவல்நிலையத்தில் அனுராக் மீது பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்த நடிகை பாயல் கோஷ் ஆளுநர் பி.எஸ்.கோஷியாரியை சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

நடிகையுடன் மாநிலங்களவை உறுப்பினர் ராமதாஸ் அதுவாலேயும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். இதனிடையே தம்மீதான பாலியல் புகார்களுக்கு அனுராக் காஷ்யாப் மறுப்புத் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஏராளமான நட்சத்திரங்களும் அனுராக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments