நடிகர் சுஷாந்த்சிங் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இல்லை - எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு

0 1628
நடிகர் சுஷாந்த்சிங் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இல்லை - ஏய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு

நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் புகாரை எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்க்குழு மறுத்துள்ளது. அதற்கான வாய்ப்பில்லை என்று எய்ம்ஸ் நிபுணர்க் குழு அறிக்கை அளித்துள்ளது.

சுஷாந்தின் மர்ம மரணத்தில் உள்ள குழப்பத்தைத் தீர்க்க சிபிஐ அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவியை நாடினர். இதையடுத்து சுஷாந்தின் உடற்கூராய்வு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த அக்குழுவினர் சுஷாந்தின் அறையையும் ஆராய்ந்து தற்கொலை நடந்த நிகழ்வை மறுபடியும் நிகழ்த்திப் பார்த்தனர்.

இதையடுத்து சிபிஐயிடம்  நேற்று அறிக்கை அளித்துள்ளனர். இதில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments