இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு

0 476
இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மநாடு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு

இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு, காணொலி வாயிலாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கண்காணிப்புக் குழுவின் ஆலோசனையில் வெளியுற அமைச்சர் ஜெய்சங்கருடன், வங்கதேச வெளியுறவு அமைச்சரும் பங்கேற்றார். 

கூட்டத்தில், டிசம்பர் மாதத்தில், இருநாட்டு பிரதமர்களும்  உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதியை அதிகரிக்க கட்டண தடைகளை நீக்க கோரும் வங்க தேச கோரிக்கையுடன், இருநாடுகளுக்கு இடையேயான பொதுவான ஆறுகளில் இருந்து நதிநீரை பங்கீடு தொடர்பாகவும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments