வன விலங்குகளை ஒலி எழுப்பி சீண்டும் செல்பி புள்ளைங்க..! விரட்டியடித்த யானைக்கூட்டம்

0 7335

உதகையை அடுத்த மசினங்குடி மாயாறு சாலையில் வம்பிழுத்த சுற்றுலாப்பயணிகளை யானைக் கூட்டம் ஒன்று ஜீப்புடன் விரட்டியடித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. செல்ஃபி மோகத்தால் வனவிலங்குகளைத் தொல்லை செய்யும் விபரீத செல்ஃபி-பிரியர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி சுற்றுலாப்பயணிகள் இன்றி கடந்த சிலமாதங்களாக வெறிச்சோடிய நிலையில் கட்டுப்படுகளுடன் அறிவிக்கப்பட்ட தளர்வால் ஊட்டியில் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் விபரீதத்தை உணராமல் வழியில் தென்படும் வன விலங்குகளை சீண்டுவதும் செல்பி எடுப்பதும் என வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போ னது.

அந்தவகையில் மசினங்குடியில் இருந்து மாயாரு செல்லும் சாலையில் ஜீப்பில் வந்த சிலர் யானை கூட்டத்தை கடந்து வந்த நிலையில் அமைதியாக செல்லாமல் சாலையில் நின்று ஜீப்பின் ஆக்சிலேட்டரை மிதித்து சத்தம் எழுப்பி அங்கிருந்த யானைக்கூட்டத்தை சீண்டினர்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று தனது பங்கிற்கு அவர்களை விரட்டியடித்து ஷாக் கொடுத்தன அங்கிருந்த யானைக்கூட்டம்..!

ஜுராசிக் பார்க் படத்தில் டயனோசருக்கு பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஜீப்பில் தப்பிக்கும் காட்சி போல யானையின் பிளிறல் சத்தத்தால் வம்பிழுத்த சுற்றுலா பயணிகள் திகிலுடன தப்பி பிழைத்துள்ளனர்

அதே போல காட்டெருமை ஒன்று காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வந்து புல் மேய்ந்து கொண்டிருந்தது. சாலையில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த அந்த காட்டெருமையை கண்டு பலரும் பயந்து விலகிச்செல்ல , புல் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமையுடன் செல்பி எடுக்க எத்தனித்த செல்பி புள்ளையால் காட்டெருமை காண்டானது..!

விரட்டுவது போல ஒரு திகிலூட்டி அங்கிருந்து சென்றது. ஊட்டி போன்ற மலைபகுதி சுற்றுலாதளங்களில் வனவிலங்குகள் சாலைக்கு வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதனை செல்பி எடுப்பதாகவும் ,ஒலி எழுப்பியும் சீண்டி நம்மவர்கள் வாங்கிக்கட்டிக் கொள்வதும் வாடிக்கையாக நிகழ்வாக மாறிவருகின்றது.

அதே நேரத்தில் வன விலங்குகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டிய வனத்துறையினர் போதிய முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால், சில நேரங்களில் அப்பாவிகள் சிலர் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்கள் அரங்கேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments