கேரளாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை, கட்டுப்பாடுகள் தொடரும் - பினராயி விஜயன்

0 3004
கேரளாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை, கட்டுப்பாடுகள் தொடரும் - பினராயி விஜயன்

கேரளாவில் ஊரடங்கு நீடிப்பு இல்லை என்ற போதும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் அக்டோபர் முதல் தேதியில் இருந்து கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், அரசியல் கட்சியினர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உறுதியளித்துள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களுக்கான தடை நீடிக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments