"கங்கனா கருத்து தவறானதுதான், ஆனால் அவர் வீட்டை இடித்தது சரியல்ல"... சஞ்சய் ராவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

0 2134
"கங்கனா கருத்து தவறானதுதான், ஆனால் அவர் வீட்டை இடித்தது சரியல்ல"... சஞ்சய் ராவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதற்காக நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டை இடிக்கச் சொல்லி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாக சிவசேனா எம்பி. சஞ்சய் ராவத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் வாழ்வது ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருப்பது போல் இருப்பதாக கங்கனா ரனாவத் கூறிய கருத்தால் ஆளும்கட்சியான சிவசேனாவுக்கும் கங்கனாவுக்கும் மோதல் வெடித்தது.

இதையடுத்து சவால் விடுத்து மும்பைக்குத் திரும்பினார் கங்கனா. இதனிடையே கங்கனாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. தமது வீடு இடிக்கப்பட்டதற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கங்கனா ரனாவத் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் ஒருவாரத்திற்குள் எழுத்துமூலம்  பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments