சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு விஷம் காரணம் அல்ல?...சிபிஐ க்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

0 2364
சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு விஷம் காரணம் அல்ல?...சிபிஐ க்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்புக்கு விஷம் காரணம் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசாந்த் கொலை செய்யப்பட்டார் என்ற சுசாந்த் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு மாற்றாக எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே சுசாந்தின் உடற்கூறு அறிக்கை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்துள்ள அறிக்கையே இறுதியானது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரம் உடற்கூறு செய்யப்பட்டபோது ஏற்பட்ட சில தவறுகள் குறித்தும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்பது நிரூபணமாகி உள்ளதால், சுசாந்த், தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிஐ தனது விசாரணையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments