சீனப் படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க அமெரிக்காவிடம் இருந்து எம்.க்யு-9பி டிரோன் வாங்க இந்தியா முடிவு!

0 2150
சீனப் படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க அமெரிக்காவிடம் இருந்து எம்.க்யு-9பி டிரோன் வாங்க இந்தியா முடிவு!

சீன படையினரின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகளை செலுத்தக்கூடிய எம்.க்யு-9பி ஸ்கை கார்டியன் டிரோன்களை ((MQ-9B Sky Guardian drone)) வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதேபோல் இஸ்ரேலிடம் இருந்து ஏற்கெனவே வாங்கப்பட்டு உபயோகத்தில் இருக்கும் ஹெரான் ((Heron)) டிரோன் அமைப்பின் கண்காணிப்பு பரப்பரளவை விரிவுபடுத்த செயற்கைக்கோளுடன் அதை இணைக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது. 

எம்.க்யு 9 பி ஸ்கை கார்டியன் டிரோன், 40 ஆயிரம் அடி உயரத்தில் விடாமல் 40 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது.

அதில் ஏவுகணைகள், லேசர் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருள்களை 2.5 டன் எடுத்து சென்று தாக்க முடியும்.

ஏற்கெனவே அமெரிக்காவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சீ கார்டியன் டிரோன்களுக்கு பதிலாக இதை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments