ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி : சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ் இன்று பலப்பரீட்சை!

0 899
ஐபிஎல் டி20 கிரிக்கெட் : சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரிட்சையில் ஈடுபடவுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.

ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், கூடுதல் நம்பிக்கையுடன் டெல்லி அணி இன்று களம் காண்கிறது.

பெங்களூரு, கொல்கத்தா அணிகளிடம் தோல்வியடைந்த நிலையில், முதல் வெற்றியை இப்போட்டியில் பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments