சென்னையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரன் 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது!

0 2493
சென்னையில் மீண்டும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிந்து 37,920 ரூபாயாக விற்பனையானது.

இதேபோல் கிராம் தங்கம் விலையும் 4,740 ரூபாயாக குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 78 ரூபாய் உயர்ந்து 4,818 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 624 ரூபாய் உயர்ந்து 38,544 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 300 ரூபாயாக விற்பனையாகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments