சென்னையில் கே.பி.என் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து கேரளா அனுப்பப்பட இருந்த 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்!

0 2496
சென்னையிலிருந்து கேரளா அனுப்பப்பட இருந்த 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னையில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து கேரளா அனுப்பப்பட இருந்த 25 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வால்டாக்ஸ் சாலையில் இயங்கி வரும் கே.பி.என் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 15 மரப்பெட்டிகளில் வெஸ்டர்ன் டாய்லெட் பேசின்களுடன் வைத்து, ஒயிட் சிமெண்ட் பாக்கெட்டுகள் வடிவில் கடத்தப்பட இருந்த 25 கிலோ சூடோ எபிடிரைன் (pseudo ephedrine) போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதனை அனுப்பியது யார் என்பது குறித்தும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments