வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0 6927
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழக மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், இந்த ஆண்டு பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாகவே பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments