'யார்ரா அவன்... அவனைத் தூக்கி வெளியே போடுங்க...'- ஆ. ராசா பேச்சால் சர்ச்சை!

0 39464

ந்தியாவில் புதிதாக வேளாண் மசோதா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணித் தலைவர் உதயநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் பங்கேற்றனர். அந்த வகையில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்றார்.

அப்போது, கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் என்று சில கருத்துகளை அவர் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒரு திமுக தொண்டர் திடீரென ஆ.ராசா வாழ்க என்று முழக்கமிட்டதால் அவரின் பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் , கோபமடைந்த ஆ.ராசா, ”யார்ரா அவன்... அவனைத் தூக்கி வெளியோ போடுங்க... அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க” என்று டென்ஷன் ஆகி விட்டார். மேலும், ஆ.ராசா, அந்த திமுக தொண்டரை நாய் என்று குறிப்பிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments