முதலமைச்சர் கூட்டம் புறக்கணிப்பு.. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை..!

0 3670
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனை கூட்டங்களில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டு வந்தார். ஆனால் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் பங்கேற்காமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் புறக்கணித்தார்.

அதே சமயம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது அதிமுகவின் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் அங்கு சென்றார். சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பிறகு வைத்திலிங்கம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

வைத்திலிங்கம் புறப்பட்ட நிலையிலும் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையை தொடர்ந்து வருகிறார். வரும் 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவிக்க உள்ளது. அது தொடர்பாகவே தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, வைத்திலிங்கம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கேபி முனுசாமியும் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ மணிகண்டன் அங்கு வந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அமைச்சராக இருந்த மணிகண்டன், கடந்த ஆண்டு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து பேசியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments