கேரளாவில் மருத்துவ அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ஐஎம்ஏ கோரிக்கை!

0 3123
கேரளாவில் மருத்துவ அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும்: ஐஎம்ஏ கோரிக்கை!

கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளுக்கு நாள் கேரளாவில் வைரஸ் தொற்று பலமடங்கு அதிகரித்து வருவதை ஐஎம்ஏ சுட்டிக்காட்டி உள்ளது.

நோயின் தீவிரத்தை மக்கள் உணரவும், தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும் மருத்துவ அவசரநிலை பிறப்பிப்பது அவசியம் என அறிக்கை ஒன்றில் ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.

கடந்த 28 நாட்களில் மட்டும் கேரளாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அங்கு தினசரி கொரோனா எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments