'உன் அக்கா வாழ்க்கை பாழாகி விடும்!' - இளம் பெண்ணை சீரழித்தவர் போக்ஸோவில் கைது

0 9209

காரைக்குடியில் கொழுந்தியாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்கா கணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பெண்ணுக்கும்  தர்மபுரி மாவட்டத்தை மகன் ரஞ்சித் என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த ரஞ்சித் சென்னையில் வேலை செய்கிறார். இந்த நிலையில், ரஞ்சித்தின் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமிக்கு ரஞ்சித் கடந்த புல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் உனது அக்காவின் வாழ்க்கை அழிந்துவிடும் என்றும் அடித்து மிரட்டியுள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட தாயார் விசாரித்துள்ளார்.  அப்போது, அக்காவின் கணவர் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுமி அழுதபடி கூறியிருக்கிறார். இதுகுறித்து, சிறுமியின் தாயார், ரஞ்சித்தின் தாய் கவிதாவிடம் கூறிய போது அவரோ, 'உன் இளைய மகள்மீது மகன் ஆசைப்பட்டு விட்டான் . அவளையும் என் மகனுக்கே திருமணம் செய்து கொடுத்துவிடு' என்று அலட்சியமாக கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

உடனடியாக, சிறுமியின் தாயார், காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரஞ்சித்தின் தாயார் கவிதாவிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments