தறி நெய்து கிடைத்த பணத்தில், ஆளில்லாமல் இயங்கும் காரைத் தயாரித்து சேலம் மாணவர் சாதனை!

0 13214
மாணவர் உதயகுமார்

சேலம் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த மாணவர் தற்போது ஆளில்லாமல் இயங்கும் பேட்டரி காரை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதி ஆண்டில் படித்து வருகிறார். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த போதே பல்வேறு அறிவுசார் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ள உதயகுமார், இதுவரை 36 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். நாட்டுக்காகப் பயன்படும் வகையில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரத்தை வடிவமைத்திருந்த உதயகுமார் தற்போது ஆளில்லாமல் இயங்கும் வாகனத்தை வடிவமைத்து, உருவாக்கியுள்ளார்.

டெக் இன்வெண்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரை எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் உருவாக்கியுள்ளார் உதயகுமார். மேலும், ரிமோட் சென்சிங் மூலம் ஆளில்லாமல் இயங்கும் இந்தக் கார் வாய்ஸ் ரெகக்னைசிங், மொபைல் மற்றும் இணையதளம் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இயக்கும் வகையில் உருவாக்கியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து மாணவர் உதயகுமார், ”இந்திய அளவில் ஆளில்லாமல் பேட்டரியால் இயங்கும் காரை முதன்முதலில் கண்டுபிடித்துள்ளேன். ராணுவ பீரங்கிகளில் கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.  கொரோனா ஊரடங்கு காலத்தில் தறி நெய்து கிடைத்த பணத்தைக்கொண்டு இந்தக் காரை வடிவமைத்து, உருவாக்கியுள்ளேன். தனியார் அல்லது அரசு நிதி உதவி செய்தால் மேலும் பல கண்டுபிடிப்புகளை என்னால் உருவாக்க முடியும்" என்று கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments