கேரள சிறுமியின் டென்னிஸ் திறனை பாராட்டி நட்சத்திர வீரர் ரபேல் நடால் வீடியோ வெளியீடு

0 3084
கேரள சிறுமியின் டென்னிஸ் திறனை பாராட்டி நட்சத்திர வீரர் ரபேல் நடால் வீடியோ வெளியீடு

கேரளாவைச் சேர்ந்த 5 வயது சிறுமியின் டென்னிஸ் திறனை பாராட்டி, நட்சத்திர வீரர் ரபேல் நடால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் டென்னிஸ் விளையாட்டில் இளம் திறமைசாலியாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விவிக்தா விசாக் எனும் சிறுமியை தேர்ந்தெடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரபேல் நடால் வெளியிட்டுள்ள வீடியோவில்,டென்னிஸ் மீதான விவிக்தாவின் ஆர்வத்தை பாராட்டியுள்ளதோடு, சிறுமி நல்ல திறமையை பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவிக்தாவை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு பரிசு வழங்க உள்ளதாகவும், விரைவில் நேரில் சந்திப்போம் எனவும் நடால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments